மனதின் ஆசை | Manathin Aasai | Tamil Romantic Love Song 2026 | Kannamma Song | Mikki Mobi

Nov 10, 2026 · 583 views · 4 page visits

Mikki Mobi
Mikki Mobi 231 subscribers
Subscribe
Back to Entertainment

மனதின் ஆசை | Manathin Aasai | Tamil Romantic Love Song 2026 | Kannamma Song | Mikki Mobi

November 10, 2026 · 583 views · 4 page visits

மனதின் ஆசை (Manathin Aasai) – ஒரு கிராமத்து காதல் கதை பாடல் 💕
A heartfelt Tamil romantic melody about a young man's silent love for his Kannamma, his patient waiting, and the beautiful moment she finally says yes.

🎵 Song: மனதின் ஆசை (Manathin Aasai)
✍️ Lyrics & Author: Subash
💖 Kannamma: Nimmi
📺 Channel: Mikki Mobi

If this song touched your heart, please LIKE 👍, SHARE with your loved one ❤️ and SUBSCRIBE to Mikki Mobi for more Tamil songs and stories 🔔

⏱️ Chapters
0:00 Intro – உன் முத்துச் சிரிப்பில்
0:35 Pallavi – ஒரு நிமிடம் நில்லு
1:10 Charanam 1 – இரவிலும் பகலிலும்
1:45 Pallavi
2:20 Charanam 2 – காலம் முழுவதும்
2:55 Charanam 3 – என் பயணத்தில்
3:30 Bridge – என் கண்ணில் தெரியும் காதலை
3:54 Final Pallavi
4:18 Kannamma's Reply – இத்தனை நாளாய்
4:52 Duet Finale – என்னை கட்டி அணைத்திடு
5:28 Outro – என் கண்ணம்மா

📝 Lyrics – மனதின் ஆசை
ஆஆஆ... ஆஆஆ...
ஹ்ம்ம்... ஹ்ம்ம்...
உன் முத்துச் சிரிப்பில் நான் விழுந்தேனடி...
உன் மௌனப் பார்வையில் தொலைந்தேனடி...
உன் கள்ளப் பார்வையில் என் படகு
கரை தட்டிப் போனதடி... கண்ணம்மா...

ஒரு நிமிடம் நில்லு... உன் மனதைச் சொல்லு...
கண்ணாலே என்னைக் கொல்லாதே...
காதலாலே காப்பாத்தடி...
கண்ணம்மா... என் கண்ணம்மா...
உன்கிட்ட நான் சொல்லணும்...
உன் கண்ணைப் பார்த்துச் சொல்லணும்...
என்னுயிர் நீதானடி...
என் காதல் புரியாதா டி?
உன் காதலில் எனக்கும் இடமில்லையா?
உன் வரவுக்காகக் காத்திருக்கேனடி...
உன் தோளில் சாய்ந்திடவே...
உன் கரம் கோர்த்து நடந்திடவே...

இரவிலும் பகலிலும் என் மனசுக்குள்ளே
நீயும் வீடு கட்டுறாயே...
உன் நினைவுகள் வந்து போகையிலே
என் நெஞ்சம் தடுமாறுதடி...
செல்லும் வழியெல்லாம் உந்தன் ஞாபகம்...
என் வலியைக் கூட மறக்குதடி...
உன் விழியை ஒருமுறை பார்த்தாலே
என் உலகம் புதிதாய்ப் பிறக்குதடி...
என்னுயிர் நீதானடி... நீதானடி...
அந்த ஏழு நிமிடமும் போதாதடி...
இன்னும் கொஞ்சம் பேசணுமடி...
உன் மடியில் சாயணுமடி...

ஒரு நிமிடம் நில்லு... உன் மனதைச் சொல்லு...
கண்ணாலே என்னைக் கொல்லாதே...
காதலாலே காப்பாத்தடி...
கண்ணம்மா... என் கண்ணம்மா...

காலம் முழுவதும் காத்திருந்தேனடி...
கால் கடுக்க நின்றிருந்தேனடி...
பல்லக்கில் உன்னைப் பார்க்கும் கனவில்
பாதையெல்லாம் கடந்தேனடி...
நீயோ யாரும் எட்டாத மாங்கனி...
நானோ உன் அன்பை ஏங்கும் ஏழையடி...
எட்டாத தூரத்தில் நீ இருந்தாலும்
என் எண்ணமெல்லாம் உன் பின்னாலே...
மனசைக் கொடும்மா... ஒருமுறை கேளம்மா...
என் காதல் கதையைப் புரிஞ்சுக்கம்மா...
உன் மூச்சுக் காற்று தீண்டும்போது
என் நெஞ்சில் பூ மழையடி...

என் பயணத்தில் யாரும் எட்டாத
நிலவாக நீ இருந்தால் போதுமடி...
வழி முழுக்க உன்னைப் பார்த்தே
என் பயணத்தை முடிப்பேனடி...
கல்லறையிலும் ஒரு சன்னல் வேண்டுமே...
உன் ஒளி என் மீது விழுந்திடவே...
உயிர் பிரிந்தாலும் உன் நினைவில்
என் இதயம் பாடுமே காலமெல்லாம்...
என்னைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லு...
உன் இதயத்தில் எனக்கும் இடமுண்டா?
நான் வாழும் வாழ்க்கை முழுவதும்
உன் காதல் மட்டும் போதுமடி...

என் கண்ணில் தெரியும் காதலை
உன் கண்ணும் உணரவில்லையா?
என் நெஞ்சில் வாழும் ஓவியம்
உன் நெஞ்சில் வரையவில்லையா?
நான் காத்திருந்த காலமெல்லாம்
உன் பதிலுக்காகத்தானடி...
நீ கை கொடுக்கும் அந்த நொடியே
என் வாழ்க்கை முழுமையடையுமடி...

ஒரு நிமிடம் நில்லு... இனி மௌனம் வேண்டாம்...
உன் மனதை இன்று சொல்லிவிடு...
கண்ணாலே என்னைக் கொல்லாதே...
காதலாலே என்னைக் காப்பாத்தடி...
உன்கிட்ட நான் சொல்ல வந்தேன்...
என் உயிரையே கொடுக்க வந்தேன்...
என்னுயிர் நீதானடி...
என் உலகம் நீதானடி...

இத்தனை நாளாய் காத்திருந்தாயா?
என் மனசுக்குள்ளும் நீ இருந்தாயடா...
சொல்லாமல் நான் மறைத்த காதலை
உன் கண்களிலே படித்தேனடா...

என்னவளே... நீதானடி...
என் கனவின் விடியலடி...

என்னை கட்டி அணைத்திடு...
கரம் கோர்த்து நடந்திடு...

இனி உன் வழியில் நானும் வருவேன்...
உன் நிழலாகத் துணையாய் இருப்பேன்...

இனி வாழும் காலமெல்லாம்
இணை பிரியாமல் வாழ்ந்திடுவோம்...
நீயும் நானும் சேர்ந்திடவே...
நம் காதல் கதை தொடர்ந்திடவே...

உன் முத்துச் சிரிப்பில் நான் விழுந்தேனடி...
இன்று உன் இதயத்தில் வாழ்கின்றேனடி...

ஹ்ம்ம்... ஹ்ம்ம்...
என் கண்ணம்மா...
என் காதல் நீதானம்மா...

ℹ️ Music and visuals in this video were created with AI tools (Suno AI, Google Flow) from original lyrics written by Subash.
© Mikki Mobi. All rights reserved. Please do not re-upload.

#மனதின்ஆசை #TamilLoveSong #Kannamma #TamilRomanticSong #TamilMelody #காதல்பாடல் #MikkiMobi
Watch on YouTube